நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் விஜய், வழக்கமான மோட்டிவேஷனல் குட்டி கதையை ரசிகர்கள் முன் பகிர்ந்துக் கொண்டார்.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்.19) ரசிகர்களின் ஆராவாரத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றை கூறினார்.
“லைஃப் கூட ஃபுட்பால் மாதிரி தாங்க.. நாம ஒரு கோல் போட ட்ரை பண்ணுவோம் அதை தடுக்க நிறைய பேர் வருவாங்க.. இதுல சேம் சைட்லயே ஒருத்தன் எதிர் டீமுக்கு கோல் அடிப்பான். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தீர்கள் என்றால் எல்லாம் சரியாக இருக்கும் என குட்டிக் கதையை சொன்ன விஜய், வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க என்றார். மேலும், நெகட்டிவிட்டி மற்றும் ட்ரோல்ஸ் குறித்து பேசிய விஜய், ஃபன் வரைக்கும் ஓகே அதை தாண்டுறப்போ தான் பிரச்சனை” என கூறினார்.
இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், கலைஞர் இடையிலான புரிதல் குறித்த விஷயத்தையும் எடுத்துக் கூறினார். “எம்.ஜி.ஆர் ஒருவாட்டி காரில் போகுபோது அவர் கூட வந்தவர், கலைஞர் காருணாநிதி குறித்து கலாய்த்து பேசியுள்ளார். அப்போது கலைஞருக்கும் எனக்கும் 1000 இருக்கும்.. ஆனா அவரை தரைக்குறைவா பேசக் கூடாது. எதிரியையும் மதிக்கணும். இதுக்கு ரியாக்ட் பண்றது விட்டுட்டு சமூக பிரச்சனைல கவனிக்கலாம். விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க” என்றார்.