ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது (செப்டம்பர் 19) நடைபெற்று வருகிறது.
விழாவில் பேசிய இயக்குநர் அட்லி, ''மெர்சல்' படத்துக்கு பிறகு பிகில் பண்றதுக்கு முழு காரணம் என்னோட அண்ணன் தான். எல்லோருக்கும் Favourite Hero இருப்பாங்க. எனக்கு எப்போமே இவர் தான். அண்ணா ஒரு பயங்கரமான லைன் மாட்டியிருக்குனு விஜய் அண்ணா கிட்ட சொன்னேன். கதை கேட்டுட்டு ஏஜிஎஸ் கூட பண்ணலாம்னு நம்பர் கொடுத்தாரு.
இந்த படம் பொண்ணுங்களுக்கு நல்ல கதையா இருக்கும். நயன்தாரா எனக்கு அக்கா மாதிரி'' என்றார். அப்போது, பிகில் ஸ்போர்ட்ஸ் படமா இருக்குமா? இல்ல கமர்ஷியல் படமா? என்று விஜே ரம்யா அட்லியிடம் கேட்டார். அதற்கு அட்லி, கில்லி ஸ்போர்ட்ஸ் படமா இல்ல கமர்ஷியல் படமா என்று எதிர் கேள்வி கேட்டார்.
பின்னர் பேசிய அவர், 'தெறி' நிர்பயாவ அடிப்படையா வச்சு எடுத்த படம். 'மெர்சல்' எங்க அம்மாக்கு ஆபரேஷன் தியேட்டர்ல நடந்த விஷயத்தை பத்தி எடுத்தது. 'ராஜா ராணி' 'மெர்சல்' எல்லாமே பொண்ணுங்க பத்தி எடுத்த படம். 'பிகில்' மாநில அளவிலான போட்டி பற்றிய படம்'' என்றார்.
அப்போது அவர் ஷாருக்கானுடன் இருக்கும் மீம் போட்டுகாட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆங்கிலம் தமிழ் எல்லாம் அறிவு கிடையாது, மொழி. அதே மாதிரி கருப்பு, வெள்ளை கலர் தா அழகு இல்லை'' என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், 'பாடலாசிரியர் விவேக் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட் மாதிரி. ஜாலியா இருப்பாரு. ஆனா சரியான நேரத்துல பாடல்கள் கொடுத்துடுவார். அலாவுதின் பூதம் மாதிரி கலை இயக்குநர் முத்துராஜ் பக்கத்துல இருப்பாரு. மவுண்ட் ரோடு செட் கூட கிரியேட் பண்ணிடுவாரு. ஜி.கே.விஷ்ணு கூட அடுத்த படம் பன்றேன். குஷில பார்த்த விவேக் சார இப்போ பார்ப்பிங்க. இந்த படத்துல நீங்க எல்லாம் உழைச்சத விட பொண்ணுங்க அக்னி நட்சத்திரம் ல 45 நாள்ல விளையாடுனாங்க'' என்றார்.