Darbar USA others

பிக்பாஸ் ஸ்டாரின் மனைவி நெகிழ்ச்சி - 'அவருக்கு பிறந்த நாள், நான் 6 மாசம் கர்ப்பமா இருக்கேன்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

த்ரிஷா, பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்திருந்த 'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'உன்னைப் போல் ஒருவன்', 'தனி ஒருவன்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார்.

Bigg Boss fame Ganesh Venkatraman wife Nisha surprise to her Husband

மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அங்கு அவரது குணநலன்கள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இவர் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடல் பாடும்  வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ''கடந்த 2019 ஆம் ஆண்டு பல வழிகளில் ஸ்பெஷல். கணேஷின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு நெனச்சேன். அப்போ நான் 6 மாதம் கர்ப்பமா இருந்தேன். 

நம்முடைய உறவு எப்படி தொடங்கியது என்று திரும்பி பார்க்கணும்னு நெனச்சேன். என்னுடைய கிட்டார் டீச்சர் அரவிந்த், மற்றும் பாடலாசிரியர் வெங்கட் உதவியுடன் நம் அழகான நினைவுகளை பாடலாக மாற்றினோம். பாடல் பாடவேண்டும் என்றால் நான் கூச்ச சுபாவமுள்ளவளாக மாறிவிடுகிறேன்.

அதனால் என் பயத்தை விடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கணேஷிற்காக இதனை செய்தேன். நான் புரொஃபஷனல் சிங்கர் கிடையாது. நான் இதுவரை பாடவும் முயற்சித்ததில்லை. அதனால் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு , ''Love You to the Moon Sweet hear''t என கணேஷ் கமெண்ட் செய்ய, அதற்கு பதிலளித்த நிஷா, இதுக்கு மேல சர்ப்ரைஸ் ஸ்டாக் இல்லை என்பதை பதிவு செய்து கொள்கிறேன்'' என்று பதிலளித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2019 was a very special year in many ways !! I wanted to surprise ganesh for his birthday, i was 6 months pregnant. I decided to look back on how our relationship started 👩‍❤️‍👨💕. With the help of my guitar teacher Arvind and lyrist Venkat we penned down our beautiful moments and composed a song. I am a very shy person when it comes to singing, i dint sing at my own wedding which is considered to be a custom 😅... So i decided to break this fear and do this for Ganesh. I am not a professional singer, and i have NEVER tried singing! so plz excuse the flaws 😬🙆🏻‍♀️ MY Professional Musician friends @saindhavi_prakash and @dharankumar_c plz forget it as soon as you see this 😬 Singer : Nisha Ganesh Music: Aravind.G Lyricist : Dhavamani Venkatesan Sound Engineer : Ivis John Sebastian supporting voice : Pokkisha Sandra Mixing n Mastered : Ivis John Sebastian n Saurabh Visuals: @badri_pn Editing: @vidhya_kamesh Recorded at Contrabass Music Studios @pokkishiya_sandraaa Thank you for helping me out to do this surprise💕

A post shared by Nisha Ganesh (@prettysunshine28) on

Entertainment sub editor

Bigg Boss fame Ganesh Venkatraman wife Nisha surprise to her Husband

People looking for online information on Bigg boss, Ganesh Venkatram, Nisha will find this news story useful.