தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’அல வைக்குந்தாபுராமுலு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் அவருடன் பூஜா ஹெக்தே, தபூ, நிவேதா பெத்துராஜ் என்று ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் பிஹைண்ட்வுஸ் டிவிக்கு பேட்டி அளித்திருந்தார். சுமார் 20 வருடங்கள் சென்னையில் வாழ்ந்த அல்லு அர்ஜுன் தன் சென்னை நினைவுகள், திரைப்பட அனுபவங்கள், தன் குழந்தையை ஷூட் ஸ்பாட்டுக்கு அழைத்து போனபோது நிகழ்ந்த சுவாரசிய சம்பவம் ஆகியவற்றை இந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.