நடிகை த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வேறு ஒன்றும் இல்லை.
நடிகை த்ரிஷா டிக்டாக்கில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது முதல் வீடியோவாக தான் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது டிக்டாக்கில் டிரெண்டிங்கில் இருக்கிறது. இதனை அவரது ரசிகர்கள் பகிர்ந்து அவரது டான்ஸை பாராட்டி வருகின்றனர்.
நடிகை த்ரிஷா தான் செய்யும் ஒவ்வொரு வேடத்தையும் மிகவும் தனித்துவமாக செய்யக்கூடியவர். அதனால் அவரது கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. உதாரணமாக கில்லி தனலெட்சுமி, விடிவி ஜெஸ்ஸி, என்னை அறிந்தால் ஹேமனிகா, 96 ஜானு அந்த லிஸ்ட் மிக நீளம்.
Watch on TikTok