கார்த்தியின் கைதியிடம் சிக்கிய மாஸ்டர் சீக்ரட்..! இப்படி மறைக்கிறாங்களே.. என்ன விஷயம்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படத்தின் பாடலாசிரியரும் கைதி படத்தின் தயாரிப்பாளரும் செம ஜாலியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

மாஸ்டர் சீக்ரட் கைதியிடம் தான் இருக்கிறது | vijay master lyricist vishnu edavan and karthi's kaithi producer s.r.prabhu funny tweet

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசைமைத்துள்ள இத்திரைப்படத்தின் ஆல்பம் வெளியாகி ஹிட் அடித்தது. அண்மையில் பொளக்கட்டும் பற பற என்கிற பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. 

இந்நிலையில் இப்பாடலை எழுதிய விஷ்ணு இதை ட்விட்டரில் ஷேர் செய்தார். அப்போது கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ''உன் சீக்ரட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' என ட்விட்டியுள்ளார். இதற்கு விஷ்ணு, ''மிக்க நன்றி, அது அப்படியே நமக்குள்ளயே இருக்கட்டும் அன்பான சார்'' என கேட்டுக்கொண்டுள்ளார். இவர்களின் இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் சீக்ரட் கைதியிடம் தான் இருக்கிறது | vijay master lyricist vishnu edavan and karthi's kaithi producer s.r.prabhu funny tweet

People looking for online information on Anirudh Ravichander, Kaithi Tamil, Lokesh Kanagaraj, Master, SR Prabhu, Vijay, Vishnu edavan will find this news story useful.