எந்திரன்ல டபுள் ஆக்டிங் சீன்களில் இன்னொரு ரஜினியா நடிச்ச தமிழ் நடிகர் இவரா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற ரோபோவாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். குறிப்பாக சிட்டி என்ற ரோபோவாக வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் இன்றளவும் பிரம்மிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும் பிரபல நடிகர் மனோஜ் கே பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் 'எந்திரன்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேட காட்சிகளின் போது, ஒரு ரஜினிக்கு பதிலாக அவர் நடித்திருந்தார். அதன் விஎஃப்எக்ஸ் காட்சிகளில் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார்.

 

 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Actor Manoj K Bharathi shares Rajinikanth, Shankar's Enthiran's VFX video | ரஜினிகாந்த், ஷங்கரின் எந்திரன் பட விஎஃப்எக்ஸ் காட்சிகளை பகிர்ந

People looking for online information on Enthiran, Manoj Bharathirja, Manoj K Bharathi, Rajinikanth, Shankar will find this news story useful.