சென்னை-28 படத்தில் நடித்த விஜயலட்சுமி தன் மகனின் க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சென்னை-28 படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் தமிழ் திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மகளாவார். இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சன் டிவியின் நாயகி சீரியலில் நடித்த இவர் அதிலிருந்து பாதியில் விலகி கொண்டார். இதையடுத்து இவர் டும் டும் டும் சீரியலில் நடித்தார்.
இந்நிலையில் விஜயலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவரது மகன் ஆடுவதை வீடியோ எடுத்து அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவரது கணவர் ஃபெரோஸ் சமையலில் பிஸியாக இருக்க, மகன் ஆடும் ஆட்டத்தை அவர் உற்சாகமாக ரசிக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனது கணவர் சமைப்பத்தை குறிப்பிட்டு, ''இந்த ஊரடங்கு பல நடக்காத விஷயங்களை நடத்தியுள்ளது'' என அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
When mommy cut her finger daddy decides to take over the kitchen today. And kutty nilan has his part to play!
P.s he is cooking! This quarantine made the impossible possible 🤷♀️😋 #vaathicoming #happydance #stayhome #staysafe #hubcooks #hyderabadichicken #nilan @feroz_film pic.twitter.com/RryMc1HXHn
— Vijayalakshmi A (@vgyalakshmi) April 10, 2020