மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இத்தகைய போராட்டங்களுக்கு எதிர்கட்சியினர் மட்டுமல்லாமல் திரையுலகினரை சேர்ந்த ஒரு சிலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்புகளை டிவிட்டர் பக்கம் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவிற்கு எதிர்த்து போராட்டம் நட்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். இங்க சர்வாதிகார நாடகம் நடந்துட்டு இருக்கு. ஐரோப்பாவில் நடிந்தது. அதை இப்போ ரீமேக் பண்றாங்க.. இதுக்காக தான் 12 வருஷத்துக்கு முன்னாடி 'ஹேராம்' பண்ணேன் என்றார்.