’குருவுடன் பணியாற்றிய கடைசி படம்..’ நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சேரன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பாரதி கண்ணம்மா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் சேரன். ‘வெற்றிக்கொடிகட்டு’, ’பாண்டவர் பூமி’ என்று பல்வேறு படங்களை இயக்கிய அவர் தங்கர் பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின் தானே இயக்கி-நடித்த ’ஆட்டோகிராஃப்’ திரைப்படம் அவரை புகழின் உச்சியில் சேர்த்தது.

Director Cheran remembers his time as associate director of KS Ravikumar in twitter.

இறுதியாக ’ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ (2016), ’திருமணம்’ (2019) படங்களை இயக்கிய அவர் தற்போது சாய் ராஜ்குமார் இயக்கும் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் ஹோரோவாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘நாட்டாமை’ படத்தின் க்ரெடிட்ஸில் வரும் சேரனின் பெயரை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதனை ரீ-ட்வீட் செய்த சேரன், ‘நான் எனது குருவுடன் வேலை செய்த கடைசி படம். அதன் பிறகு நான் இயக்குனராகும் முயற்சியில் வந்துவிட்டேன். இரண்டு வேடங்களில் சரத்குமார் அவர்கள் நடிக்க 52 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். குஷ்பு, மீனா ஆகியோருடன் கவுண்டமணி அண்ணன், செந்தில் அண்ணன் விஜயகுமார் சார். அற்புதமான அனுபவம்.’ என்று கூறியுள்ளார்.

Tags : Cheran

Director Cheran remembers his time as associate director of KS Ravikumar in twitter.

People looking for online information on Cheran will find this news story useful.