இந்தியன் 2 விபத்து - படப்பிடிப்பில் இருந்த கமல் - க்ரேன் ஆக்சிடென்ட்டில் பலியானவர்கள் யார்...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமலின் இந்தியன் 2-வில் நடந்த க்ரேன் ஆக்சிடென்ட்டில் பலியானவர்கள் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

கமலின் இந்தியன் 2 விபத்து தகவல் | kamal shankar's indian 2 crane accident details

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தியன் 2-வின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இ.வி.பி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது சுமார் 150 அடி க்ரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் க்ருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் மற்றும் ப்ரொடக்‌ஷன் அசிஸ்டன்ட் மது ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் நடிகர் கமல் இருந்ததாகவும், அவருக்கு எந்த காயமும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கமலின் இந்தியன் 2 விபத்து தகவல் | kamal shankar's indian 2 crane accident details

People looking for online information on Crane accident, Indian 2, Kamal Haasan, Shankar will find this news story useful.