ஆர்யாவின் புதிய லுக் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவி சாயிஷா ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் ஆர்யாவின் புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. உடலை கட்டு மஸ்தாக மாற்றி, அல்னால்டு போல அவர் ஜிம்மில் இருக்கும் போட்டோ வைரல் ஆகி வருகிறது. மேலும் ஆர்யாவின் 30-வது படத்தை பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் ஆர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய லுக் அந்த படத்திற்கா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“You Never know how strong You are until Being strong is the only choice you have”
An Update about my next film at 5pm tomorrow #Arya30 #Prelook pic.twitter.com/I78DyhzRQY
— Arya (@arya_offl) February 19, 2020