கொரோனா வைரஸ் எதிரொலியாக ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், அதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் 31 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக திரைப்பட துறையில் எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்சி ஊழியர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார். ஃபெப்சி அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் தின வருமானத்தை எதிர்ப்பார்த்துள்ளதால், சிவகார்த்திகேயன் அவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனிடையே நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி, தங்கள் குடும்பத்தின் சார்பாக ஃபெப்சி அமைப்புக்கு 10 லட்சம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.