கொரேனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் இன்று (24-03-2020) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. மளிகை, காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எப்பொழுதும் போல் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப் கொண்டு கழுவ வேண்டும், வெளியில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும், ஒருவருக்கொருவர் சற்று இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால் இந்த நடைமுறைகள் அவசியமானது என்று கூறப்படும் நிலையில், மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியில் சகஜமாக நடமாடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், மருந்து பாட்டில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பாட்டிலில் கோவிட் 19 மெடிசின், வீட்டில் இருங்க, 100 % பாதுகாப்பானது எழுதப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவிற்கு மருந்து எதுவும் அதிகாரப்பூர்வமாக கண்டுப்பிடிக்காத நிலையில் வீட்டில் இருப்பது மட்டுமே கொரோனாவிற்கான தீர்வாக இருக்கும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
— Dir.JohnMAHENDRAN (@johnroshan) March 24, 2020