என்னது விண்வெளியில் குப்பையா? மிஷன் சக்தி திட்டத்தால் நாசா வருத்தம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

 

என்னது விண்வெளியில் குப்பையா? மிஷன் சக்தி திட்டத்தால் நாசா வருத்தம்!

இந்தியா அரசு கடந்த வாரம் மிஷன் சக்தி என்ற திட்டத்தின் மூலம் விண்வெளியில் உள்ள செயற்கைகோள்களை தாக்கும் ஏவுகனையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதனால் உலகில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கு பிறகு செற்கைகோள்களை வீழ்த்தும் ஏவுகனைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்த சோதனையின் மூலம் விண்ணில் 400 குப்பைத் துண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது நல்ல விஷயம் அல்ல என்றும் நாசா அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் அங்கு இருக்கும் விண்வெளி வீரர்களுக்கும் இந்த குப்பைத் துண்டுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் நாசா அச்சம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரடென்ஸ்டைன், ‘செயற்கைக்கோளை அழிப்பதற்காக இந்தியா நடத்திய சோதனை மிகவும் மோசமானது. இதனால், தற்போது பூமியின் மேற்பரப்பில் 400 குப்பைத் துண்டுகள் மிதக்கின்றன. ஏவுகணையை செலுத்தி செயற்கைக்கோளை அழித்த இந்தியாவின் சோதனையால், கோள் சிதறியது. அப்படிச் சிதறியதில் அனைத்துக் குப்புகளையும் நம்மால் கண்டுபிடித்து விட முடியாது. 10 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவு கொண்ட துண்டுகளை மட்டும்தான் தற்போது நாம் கண்டுபிடித்து வருகிறோம். அப்படி 60 துண்டுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

24 துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தாகும் வகையில் விண்ணில் மிதந்து வருகின்றன. இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது தற்போது வெடித்து சிதறிய செயற்கைகோள் மோதுவதற்கு 44 சதவீதம் சாத்தியம் உள்ளது .மேலும் எதிர்காலத்தில் விண்ணில் மனிதர்களை அனுப்புவது ஆபத்தானதாக மாறும். இதைப் போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது' என்று காட்டமாக பேசியுள்ளார்.

இந்நிலையில், விண்ணில் மிதக்கும் குப்பைத் துண்டுகளில் பெரும்பாலனவை, பூமியை நோக்கி வரும்போது அது எரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

MISSION SHAKTHI, NASA