23 குழந்தைகளுக்கு விஷ உணவு... அதிரவைத்த மழலையர் பள்ளி ஆசிரியை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மழலையர் பள்ளியில்  படித்துவரும் குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்து, ஆசிரியை ஒருவர் அதிரவைத்துள்ளார்.

23 குழந்தைகளுக்கு விஷ உணவு... அதிரவைத்த மழலையர் பள்ளி ஆசிரியை!

சீனாவில் ஹெனான் மகாணத்தில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில், 3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கு காலை உணவாக  குழந்தைகளுக்குக் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது. சிறிதுநேரத்தில் சுமார் 23 குழந்தைகளும் வயிற்று வலியால் துடித்துள்ளனர். மேலும் சிலக் குழந்தைகள் வாந்தி எடுத்துள்ளனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகம்,  உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளது. அங்கு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் சோடியம் நைட்ரேட் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால், போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். 

இறைச்சியை பதப்படுத்துவதற்காக பயன்படும் வேதிப்பொருள் எப்படி கஞ்சியில் கலந்தது என, அதனைக் கொடுத்த வாங் என்ற ஆசிரியையிடமும் விசாரணை நடந்தப்பட்டது. அதில், தனதுடன் பணிபுரியும் ஆசிரியை பழிவாங்கவே, அந்த ஆசிரியை இவ்வாறு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். மேலும் மழலையர் பள்ளி மூடப்பட்டதுடன், மற்ற குழந்தைகள் அனைவரும் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். தற்போது 15 குழந்தைகள் உடல்நிலை சீராகி வீடு திரும்பியுள்ளனர். ஒரு குழந்தை மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

CHINA, KINDERGARTEN, POISION, SODIUMNITRATE, CHILDREN