நடமாடும் நூலகமான ஷேர் ஆட்டோ... வாசிப்பை ஊக்குவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், ஷேர் ஆட்டோவை நூலகமாக மாற்றிய ஓட்டுநரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

நடமாடும் நூலகமான ஷேர் ஆட்டோ... வாசிப்பை ஊக்குவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்!

இந்தோனேஷியாவில், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தமது வாகனத்தையே நடமாடும் நூலகமாக மாற்றி, சிறுவர், சிறுமிகளுக்கு சேவையாற்றி வரும் நிகழ்வு அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜகர்தா நகரில் கடந்த 2017ம் ஆண்டு ஷேர் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், கினாங் என்ற அந்த ஓட்டுநர் தமது வாகனத்தை நடமாடும் நூலகமாக மாற்றிவிட்டார்.

தம்மிடம் கிடைத்த புத்தகங்களை, வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வீதி வீதியாக செல்லும் கினாங்கிற்கு, இளம் ரசிகர்கள் ஏராளம் என கூறலாம். அவரது வாகனம் வந்து நின்றவுடன், குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை எடுத்து படிக்கின்றனர். பெரும்பாலும் காமிக்ஸ் புத்தகங்களை எடுத்து வரும் கினாங், குழந்தைகளுக்கு அதை கற்பிக்கவும் செய்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உலகின் புத்தக வாசிப்பு பழக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில், கடைசிக்கு முந்தைய இடத்தில் இடம்பெற்றது இந்தோனேசியா. இதைத் தொடர்ந்து, இளம் தலைமுறையினர் மத்தியில், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

INDONESIA, LIBRARY, SHAREAUTO, CHILDREN, COMICSBOOKS