'ஃபிரென்ட போல யாரு மச்சான்';.. ட்ரெண்டாகும் 12 வயது சிறுவனின் 6 வருட செயல்..நெகிழவைக்கும் நட்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மலையேறச் சென்றாலும் மச்சான் துணை வேணும் என்பார்கள். இங்கு மச்சான் என்பதை நண்பன் என பொருள் கொள்ளலாம். இதனை மீண்டும் ஒருமுறை சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஸூ பிங்யாங் நிரூபித்துள்ளது பலரிடையே பெரும் நெகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

'ஃபிரென்ட போல யாரு மச்சான்';.. ட்ரெண்டாகும் 12 வயது சிறுவனின் 6 வருட செயல்..நெகிழவைக்கும் நட்பு!

சினாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது செஸ்வான் மாகாணம். இங்குள்ள மீஷன் நகரத்தில்தான் ஸூ பிய்யாங் என்கிற 12 வயது சிறுவனும் அதே பகுதியில் ஸாங் லீ என்கிற மாற்றுத் திறனாளி சிறுவனும் வசித்து வருகின்றனர். பால்ய நண்பர்களான இந்த சிறுவர்களிடைடே இருக்கும் நட்பு பலரையும் வியக்க வைப்பதோடு, மனிதம் தழைத்த இந்த நட்பில், மாற்றுத் திறனாளியான ஸாங் லீயை கடந்த 6 வருடத்துக்கும் மேலாக ஸீ பிய்யாங் எங்கு சென்றாலும் முதுகில் சுமந்தே செல்வதுதான் பியூட்டி.

ஆம், பள்ளியில் எல்லா இடங்களுக்கும் சரி, எங்கு செல்ல நினைத்தாலும் இன்னொருவரின் உதவியின்றி செல்ல முடியாது தவிக்கும் ஸாங் லீயினை 6 வருடமாக ஸூ பிய்யாங் முதுகில் சுமந்தபடி சுற்றித் திரிகிறான். இத்தனை சிறிய வயதில் அகந்தையின்றி, அன்பை மையமாக வைத்து நட்போடும் கருணையோடும் இயங்கும் இந்த சிறுவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அந்நாட்டு ஊடகம் செய்திக் குறிப்பில் கொடுத்துள்ளது.

அதன்படி 40 கிலோ இருக்கும் ஸீ பிய்யாங், 25 கிலோ எடையுடன் இருக்கும் ஸாங் லீயை சுமப்பதற்கு சிரமப்படவில்லை என்றும், அவனுக்கு ஊன்றுகோலாக தான் இருப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் ஸூ பிய்யாங் கூறியுள்ளான்.  இதுகுறித்து பேசிய ஸாங் லீ, தன்னுடைய 4வது வயதில் தனக்கு இந்த நோய் வந்ததாகவும், ஆனால் பள்ளியில் சேர்ந்தது முதல் தனக்கு எல்லாவிதத்திலும் தன் நண்பன் இல்லை என்றால் தான் இல்லை என்றும் கூறியுள்ள்ளான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தன் நண்பனுக்கு 6 வருடங்களாக தோளோடு தோளாக நின்றுவரும் ஸூ பிய்யாங், தன் நண்பனை இப்படி பார்த்துக்கொள்ளும் விஷயமே, தனக்கு தெரியாது என்றும், ஒருமுறை ஸீ லாங்கின் பெற்றோர்கள் தன்னை சந்தித்தபோது இந்த உண்மையைக் கூறியதாகவும் ஸூ பிய்யாங்கின் தாய் நெகிழ்கிறார்.

CHINA, HUMANITY, HEARTMELTING