இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது: இதுவும் தேர்தல் அறிக்கைதான்.. பிரபல கட்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாட்டாளி மக்கள் கட்சி எனப்படும் பாமக மிக அண்மையில் மாநில ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி ஒப்புதலுக்கான கையெழுத்தினை போட்டது.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது: இதுவும் தேர்தல் அறிக்கைதான்.. பிரபல கட்சி!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கும் 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாமக சார்பில்தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு இருக்கும் 6 ஆயிரம் ரூபாய் மானியச் சலுகையினை ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வலியுறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், நம்மாழ்வாருக்கு மணி மண்டபம், 1 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன்கள் தள்ளுபடி, எம்ஜிஆர் பெயரில் தேசிய விருது உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளோடு, இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க முயற்சி எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PMKELECTIONMANIFESTO2019, ELECTION2019