'5 நாட்கள் நிர்வாணமாக வைத்து சித்திரவதை'...பண்ணை வீட்டில் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

திருத்தணியை பகுதியில் பள்ளி மாணவி காணாமல் போன வழக்கில்,மாணவியை 5 நாட்கள் நிர்வாணமாக வைத்து,5வது நாளில் தலையை வெட்டி கொலை செய்ததாக கைதானவர்கள் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

'5 நாட்கள் நிர்வாணமாக வைத்து சித்திரவதை'...பண்ணை வீட்டில் மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்!

திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் அவர்,கடந்த 7.9.2018-ல் பள்ளி சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு,கடந்த 11.2.2019-ல் கீச்சளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் மனித எலும்புக்கூடு கிடப்பதாகவும், அதன் அருகே மாணவியின் பள்ளிச் சீருடையிருப்பதாகவும் தகவல் வந்தது.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.பொன்னி தலைமையிலான காவல்துறையினர்,அங்கு கிடைத்த எலும்புக் கூடு, மாணவியின் பள்ளிச்சீருடையைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் இறந்தது மயமான மாணவி உஷா தான் என்பது தெளிவாகியது.

கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் கல்லூரி மாணவர் சங்கரய்யா, பண்ணை வீட்டின் உரிமையாளர் நாதமுனி, ஜெகதீஷ்பாபு, அவரின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் ஆகிய 5 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட கொடூரர்கள் மீது  போக்ஸோ சட்டத்தின் கீழ் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் குற்றவாளி சங்கரய்யா மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில்  கைதான சங்கரய்யா, நாதமுனி,ஜெகதீஷ்பாபு, அவரின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் ஆகியோர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் ''உஷா,சங்கரய்யாவின் மாமன் மகள் என்பதால் அவனை நம்பி அவனோடு சென்றிருக்கிறார்.

அதன்பிறகு நாதமுனியின் பண்ணை வீட்டிற்கு சென்ற சங்கரய்யா,உஷாவை அழைத்து வந்ததற்காக 5000 ரூபாயை வாங்கிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சித்திருக்கிறார்.அப்போது உஷா தப்பிக்க முயல மாணவியின் வாயை துணியால் பொத்தியதோடு கை, கால்களை கட்டி வீட்டுக்குள் அடைத்துவைத்தனர்.

பின்பு நாதமுனி மற்றும் அவனது நண்பர்களான ஜெகதீஷ் ,கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் ஆகியோர் தனித்தனியாக அந்த மாணவியை சீரழித்துள்ளனர்.இதையடுத்து 5 நாட்கள் மாணவியை நிர்வாணமாகவே அடைத்து வைத்து சீரழித்துள்ளார்கள்.

இதையடுத்து 5வது நாள் மாணவியிடம் பேசிய நாதமுனி 'உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்,ஆனால் இங்கு நடந்ததை யாரிடமும் கூற கூடாது என கூறியிருக்கின்றான்.ஆனால் மாணவியோ ''நான் நிச்சயமாக உங்களை காட்டி கொடுப்பேன் என கூற,அரிவாளைக் கொண்டு ஆடு வெட்டுவதைப் போல மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர்.பின்னர் மாணவியின் சடலத்தை ஓடையில் புதைத்துள்ளனர்" என்றனர்.

இந்நிலையில் மாணவியின் தரப்பில் ஆஜராகும் வக்கீல் அருள் கூறுகையில் 'மாணவியைக் கூட்டாக  சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த இவர்களுக்கு நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கவேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் கைதானவர்களுக்கு சட்ட உதவிகளைச் செய்ய வழக்கறிஞர்கள் முன்வரவில்லை. அதுபோல திருத்தணி மாணவி விவகாரத்திலும் வழக்கறிஞர்கள் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை கடந்தும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,திருத்தணி  பள்ளி மாணவிக்கு நிகழ்ந்திருக்கும் இந்த கொடுமை,பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வாழ்வதற்கு தமிழகம் பாதுகாப்பு அற்ற இடமா என்ற கேள்வியினை எழுப்பாமல் இல்லை.

MURDER, SEXUALABUSE, RAPE, SCHOOL GIRL