‘அப்பாவோட கனவ நிறவேத்தனும்’.. தந்தை இறந்த செய்தி அறிந்தும் தேர்வு எழுதிய +2 மாணவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி  மாணவி ஒருவர் தனது தந்தை இறந்த செய்தி தெரிந்தும் +2 பொதுத் தேர்வு எழுதிய செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

‘அப்பாவோட கனவ நிறவேத்தனும்’.. தந்தை இறந்த செய்தி அறிந்தும் தேர்வு எழுதிய +2 மாணவி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ஒரு பள்ளியில் ஜெய ஸ்ரீ என்ற மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை ஐயப்பன் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஜெய ஸ்ரீயின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு நேற்று இறுதி சடங்கு நடந்துள்ளது. ஆனால் நேற்று +2 வேதியியல் தேர்வு என்பதால், ஜெய ஸ்ரீ தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் பொது தேர்வு எழுத சென்றுள்ளார். மாணவி தேர்வு எழுதும் வரை காத்திருந்து, தந்தையின் இறுதிச்சடங்கிற்கு அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், தான் கணினி துறையில் சாதிக்க வேண்டும் என தனது தந்தை கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும்  என மாணவி ஜெய ஸ்ரீ தெரிவித்துள்ளார். தந்தை இறந்ததை அறிந்தும் +2 பொது தேர்வு எழுதிய மாணவியின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

TUTICORIN, EXAMS, STUDENT