‘பக்கத்துல போலீஸ் வந்தது கூட தெரியாம பப்ஜி’.. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பொதுவெளியில் பப்ஜி கேம் ஆடுவது  தடைசெய்யப்படுவதாக ராஜ்கோட் காவல்துறை கடந்தவாரம் அறிவித்தது.

‘பக்கத்துல போலீஸ் வந்தது கூட தெரியாம பப்ஜி’.. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது!

மாணவர்களையும் குழந்தைகளையும் அடிமையாக்கி, அவர்களின் ஆழ்மனதில் வன்மமான எண்ணங்களை தூண்டி அவர்களை பல்வேறு நிலைகளிலும் பாழ்படுத்துவதாகக் கருதப்படும் ஒரு வகையான நவீன இணையதள விளையாட்டாக பப்ஜி பார்க்கப்படுகிறது. இன்றைய பெற்றோரை பொருத்தவரையில் பலரும் இப்படி ஒரு விளையாட்டில் இருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி என்பதுதான் பெரியதொரு கவலையாகவே இருக்கிறது.

இந்நிலையில் ராஜ்கோட்டிலும் குஜராத்தின் மற்ற சில மாவட்டங்களிலும் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுவதோடு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 188-ன் படி இந்த அறிவிப்பை மீறி பொதுவெளியில் பப்ஜி கேம் விளையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பப்ஜி கேம் விளையாண்டதற்காக 2 நாட்களில் சுமார் 10 பேரை ராஜ்கோட் காவல்துறை கைது செய்துள்ளது. இதில் 6 பேர் இளங்கலை மாணவர்கள் என்றும், இந்த தடை உத்தரவை அறிவித்த காவல் துறை ஆணையர் மனோஜ் அகர்வால், ‘இதுதொடர்பாக இதுவரை 12க்கும் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், மேலும் இந்த தடை உத்தரவை மீறியவர்கள் பிணையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்’ என்றும் கூறியுள்ளார்.

இவர்களின் மொபைல்கள் கைப்பற்றப்பட்டு கேம் ஆடியதற்கான ஆதாரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பலரும் போலீஸார் அருகில் வருவதைக்கூட பார்க்காமல் மும்முரமாக கேம் ஆடிக்கொண்டிருந்திருக்கின்றனர். ஏற்கெனவே குஜராத் முழுவதும் ஆரம்பநிலைப் பள்ளிகளில் PUBG-யை குஜராத் அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போலீஸார் அருகில் வருவதைக் கூட அறியாமல் மும்முரமாக கேம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களின் மொபைலில் கேம் ஆடியதற்கான ஆதராங்களுடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முன்னதாக குஜராத் முழுவதிலும் ஆரம்பப் பள்ளிகளில் பப்ஜி கேம் விளையாடுவதற்கு தடை  விதித்து குஜராத் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PUBG, ARREST