‘கல்யாணம் ஆயிடுச்சு.. அவனத்தான் 2 பொண்ணுங்க ஏமாத்துனாங்க..’ தாயார் கிளப்பும் புது தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் திருநாவுக்கரசுவின் தாயார் லதா, அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி மனு அளித்திருந்தார்.

‘கல்யாணம் ஆயிடுச்சு.. அவனத்தான் 2 பொண்ணுங்க ஏமாத்துனாங்க..’ தாயார் கிளப்பும் புது தகவல்!

அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, திருநாவுக்கரசுவின் தாயார் லதா, கோர்ட்டிலேயே வைத்து தன் மகன் எந்த தவறும் செய்யவில்லை என்றும் எல்லாருமாக சேர்ந்து அவரை மாட்டிவிட்டு துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். ஃபைனான்ஸ் தொழிலைச் செய்துவந்ததாக கூறப்படும் திருநாவுக்கரசுவின் வீட்டிற்கு சிபிசிஐடி அதிரடியாக விசாரணைக்குச் சென்றனர்.

திருநாவுக்கரசுவை அவரது நண்பர்கள் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதாக அழைத்துச் சென்று அடித்ததாகவும், அவரது செல்போன்களை எடுத்து வைத்துக்கொண்ட அவர்கள் அதில் என்னென்னவோ வீடியோக்களை ஏற்றி வைத்திருப்பார்கள் என்றும் அவரது தாயார் லதா பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி விகடனுக்கு பேட்டி அளித்தபோது, திருநாவுக்கரசுவுக்கு ஒரு விபத்து நிகழ்ந்ததாகவும், அவர் யாரையும் ஏமாற்றவில்லை. அவரைத்தான் 2 பெண்கள் ஏமாற்றியதாகவும் கூறி அதிரவைத்துள்ளார். திருநாவுக்கரசு தங்கள் சொந்தத்தில் ஒரு பெண்ணை காதலித்து அது நிச்சயதார்த்தம், கல்யாணத்துக்காக மண்டப அட்வான்ஸ் கொடுத்தது வரை சென்றதாம். ஆனால் அப்போது அந்த பெண் வேறொருவருடன் தகாத ஆடையுடன் இருந்த புகைப்படத்தை பார்த்த திருநாவுக்கரசு திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இதேபோல் நகைக் கடைக்காரப் பெண் ஒருவர் திருநாவுக்கரசுவை காதலித்தாராம். அந்த பெண்ணின் வீட்டுக்குத் தெரியாமல், இருவருக்கும் வீட்டிலயே திருமணம் செய்து வைத்துள்ளார் திருநாவுக்கரசுவின் அம்மா லதா. ஆனால் இடையில் திருநாவுக்கரசுவுக்கு விபத்து நிகழ்ந்து பேசமுடியாமல் இருந்தபோது அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனாலும் இத்தனை வீடியோக்கள் வெளியாகியும், வலுவாக திருநாவுக்கரசு உள்ளிட்டோரின் மீது குற்றம் சாட்டப்பட்டும் இருக்கும் நிலையில் கூட தன் மகனை நம்புகிறார் இந்த தாய் என்று பலரும் கடிந்தபடி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

POLLACHICASE, THIRUNAVUKARASU