‘வேலைக்கு லீவு போட்டாச்சும் ஓட்டு போடுங்கபா’ .. பிரதமர் மோடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேலைக்கு லீவு போட்டாவது, ஓட்டு போடுங்கள் என்று பிரதமர் மோடி தனது வலைப்பக்கத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘வேலைக்கு லீவு போட்டாச்சும் ஓட்டு போடுங்கபா’ .. பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் பற்றி பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகத்துக்கான 4 கோரிக்கைகள் என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி பதிவிட்டுள்ளார்.

அதில் , முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ளதால், வாக்களிக்கும் நம் கடமையை நாம் செய்ய வேண்டும், அப்போதுதான் நாட்டின் கனவுகளுடன் தங்களை மக்கல் இணைத்துக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். மேலும் வாக்களிப்பதற்கான சூழலையும் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கான சூழலையும் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.

அதற்கென 4 முக்கிய கோரிகளை முன்வைத்துள்ளார். முதலாவதாக வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனை ஆன்லைனின் மூலமாகவாவது பெறுதல் வேண்டும் என்பதுதான். இரண்டாவதாக வாக்காளர்களின் பெயர் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இருக்கிறதா என நாம் சோதனையிட வேண்டும்  என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்றாவதாக, வாக்குப்பதிவு நாள் தெரிந்துவிட்டதால், கோடையில் வரும் இந்த தேர்தலில் உங்கள் கோடை சுற்றுலாக்களையும் திட்டமிட்டுக்கொண்டு எங்கிருந்தாலும், வாக்களிக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வேலைக்கு லீவு போட்டாவது வாக்கினை பதிவு செய்யுங்கள் என்று நேரடியாகவேக் கூறியுள்ளார். கடைசி அல்லது 4வது வேண்டுகோளாக குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றத்தில் இருக்கும் அனைவரையும் வாக்களிக்கச் சொல்லி அறிவுறுத்துமாறும் கூறியுள்ளார்.

NARENDRAMODI, BJP, FOUR REQUESTS