‘பொள்ளாச்சி விவகாரம்’.. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்.. மாநில மகளிர் ஆணையம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்களை மாநில மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது.

‘பொள்ளாச்சி விவகாரம்’.. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்.. மாநில மகளிர் ஆணையம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலர் இது தொடர்பாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளிப்பவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

POLLACHISEXUALABUSE, POLLACHICASE, POLLACHIABUSE