இவங்க...'பிரதமர் மோடிக்கே' டப் கொடுப்பாங்க போல ...'ட்ரெண்டிங்யில் இருக்கும் புதிய சேலன்ஞ்'!
முகப்பு > செய்திகள் > தமிழ்கடந்த ஒரு வருடமாக சமூகவலைத்தளங்களில் ஏதாவது ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி அதன் மூலம் சேலன்ஞ் கொடுக்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது.அதில் சில முட்டாள் தனமான சேலன்ஞ்களும் வைரலாகியது.குறிப்பாக துணி அலச உதவும் திரவத்தை குடிப்பது,காண்டமை மூக்குத் துடைக்கப் பயன்படுத்துவது,வாந்தியெடுக்காமல் ஒரு கேலன் பாலை குடிப்பது போன்றவைகள் அடக்கம்.
இந்நிலையில் தற்போது பிரபலமாகி வரும் சேலன்ஞ்,ஆக்கபூர்வமான வேலையை செய்வதற்கு மக்களை ஊக்கப்படுத்துகிறது. #trashtag என்ற ஹேஸ்டேக் மூலம் இளம் வயதினருக்கு இந்த சேலன்ஞ் கொடுக்கப்பட்டுள்ளது.''வீட்டின் அருகிலோ அல்லது உங்கள் வீடு இருக்கும் தெருவிலோ அதிகமாக குப்பைகள் இருந்தால் அதனை போட்டோ எடுத்துவிட்டு,பின்பு அதனை சுத்தம் செய்தபிறகு ஒரு போட்டோ எடுத்து வெளியிடுவதே இந்த சவால் ஆகும்.
2015 முதல் இந்த ஹேஸ்டேக் பயன்படுத்தப்பட்டு வந்தாலும்,பைரன் ரோமன் என்பவர் வெளியிட்ட புகைப்படம் மூலமாக தான் இது இன்னும் வைரலாக ஆரம்பித்தது.அதிலும் வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகை பைரன் ரோமனை சந்தித்த பிறகு இது இன்னும் உலக அளவில் வைரலாக ஆரம்பித்தது.
இதுகுறித்து ரோமன் கூறுகையில் ''இளைஞர்கள் மிகவும் ஈடுபாடுடன் இந்த சேலன்ஞ்யில் ஈடுபடுவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.இது நமது பூமி.நம்முடைய பூமியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு, யார் அசுத்தமாக்கியிருந்தாலும் அனைவராலும் அது சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.