காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடு! இழுபறியில் சிவகங்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணியில் முக்கியக் கட்சியாக இடம் பெற்றுள்ளது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடு! இழுபறியில் சிவகங்கை!

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மேலும், 10 தொகுதிகளின் விவரம் சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

1. திருவள்ளுர்              - கே. ஜெயக்குமார்

2. கிருஷ்ணகிரி           - டாக்டர் ஏ. செல்லக்குமார்

3. ஆரணி                        - டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத்

4. கரூர்                             - எஸ். ஜோதிமணி

5. திருச்சிராப்பள்ளி  - சு.திருநாவுக்கரசர்

6. தேனி                           - ஈவிகேஎஸ் இளங்கோவன்

7. விருதுநகர்                - மாணிக்கம் தாகூர்

8. கன்னியாகுமரி      - வசந்தகுமார்

9. புதுச்சேரி                  - வைத்திலிங்கம்

இதில் சிவகங்கை தொகுதியும் காங்கிரஸுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், அக்கட்சியின் சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அல்லது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் போட்டியிடுவர் என்று கூறப்பட்ட நிலையில், அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை.

இதனால் இந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பது இழுபறியில் உள்ளது.