உலகின் அரிதான உயிரினமான முழு வெள்ளை பென்குவின். பால்டிக் போர்ட் உயிரியல் பூங்காவில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி பிறந்தது.
பால்டிக் போர்ட் உயிரியல் பூங்காவில் பிறந்து மூன்று மாதங்களேயான ஆன இந்த ஆல்-வொயிட் ஆப்பிரிக்கன் பிளாக்ஃபுட் ஆல்பினோ பென்குவின் முதல் முறையாக நேற்று மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
தான்ஸ்க் வனவிலங்கு பூங்கா இயக்குனர் மைக்கேல் டார்கவுஸ்கி கூறியதாவது, இவ்வாறு ஆல்பினோ குறைபாடு உள்ள பென்குவின்கள் வேறு இல்லை. மேலும், இந்த பென்குவினின் பாலினம் அறியாததால் அதற்குப் பெயர் வைக்காமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த பென்குவின் சுறுசுறுப்பாகவும், நல்ல உணவு உட்கொண்டு பெற்றோர்களின் அரவணைப்பால் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும். மேலும் அதைப் பாதுகாப்பாக வளர்பதற்காக 6 பென்குவின்களுடன் மட்டுமே தற்போதைக்கு வளர்கப்படுவதாக தான்ஸ்க் வனவிலங்கு பூங்கா இயக்குனர் மைக்கேல் டார்கவுஸ்கி கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆப்பிரிக்கன் ப்ளாக்-ஃபுட் பென்குவின்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக கடந்த 2010 முதல் அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது கூறிப்பிடத்தக்கது.