‘அங்க என்ன நடக்குதுன்னு யாராச்சும் சொல்றீங்களா?’.. பொள்ளாச்சி வழக்கு பற்றி அஷ்வின்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கூட்டு பலாத்காரத்தில் தொடர்புடைய 4 இளைஞர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

‘அங்க என்ன நடக்குதுன்னு யாராச்சும் சொல்றீங்களா?’.. பொள்ளாச்சி வழக்கு பற்றி அஷ்வின்!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி பின்பு தங்கள் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்த விவகாரத்தில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்கள் கண்டனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக தக்க தண்டனையைப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி, பொள்ளாச்சி என ஆங்காங்கே இருக்கும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பல மாணவர்களுக்கும் போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபற்றி தமிழகக் கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொள்ளாச்சியில் மாணவர் போராட்டமா? என்னதான் நடக்குது அங்க? யாராவது சொல்ல முடியுமா?’என்று கேட்டதுதான் தாமதம்.

அவர் எந்த கோணத்தில் கேட்டுள்ளார் என்பது புரிந்தும் புரியாமலும் பலர் வறுத்தெடுத்துள்ளனர். அஷ்வினுக்கு பொள்ளாச்சி வழக்கு பற்றியே தெரியாதது போல் ஒருவர், என்ன கோமால இருந்தீங்களா??? என்க, இன்னொருவர் லண்டனில் இருக்கும் எனக்கே தெரிகிறது, உள்ளூரில் இருந்துகொண்டு உங்களுக்கு தெரியலயா என்று இஷ்டத்துக்கும் வறுத்தெடுத்துள்ளனர். பலர் அஷ்வினின் கேள்விக்கு உண்மையான தகவல்களையும், அங்கு நடந்த உடனடி நிகழ்வுகளையும் அப்டேட் செய்யும் வண்ணமாகவும் பதிவிட்டுள்ளனர்.

ASHWINRAVICHANDRAN, POLLACHICASE