‘ஆஹா.. பந்த விட ஒசரமா பறந்த பேட்’.. ஹிட்மேனுக்கு நடந்த சோதனை.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நிகழ்ந்த கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் பரிதாபமாக அவுட் ஆன விதம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

‘ஆஹா.. பந்த விட ஒசரமா பறந்த பேட்’.. ஹிட்மேனுக்கு நடந்த சோதனை.. வைரல் வீடியோ!

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆட்டத்தின் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 100 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்து விளாசியிருந்தனர்.

அதன் பின்னர் 273 ரன்கள் என்கிற வெற்றிக்கான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷிகர் தவான் 12 ரன்களும், விராட் கோலி 20 ரன்களும், ரிஷப் பண்ட் 16 ரன்களும், விஜய் சங்கர் 16 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ஆனால் ரோஹித் ஷர்மா மட்டும் 56 ரன்கள் வரை அசராமல் அடித்து, அரைசதத்தை தாண்டியதும் பரபரப்பான முறையில் அவுட் ஆனார்.

காரணம், ஆடம் ஸாம்பா வீசிய பந்துதான். ஆம், 29-வது ஓவரின் 2-வது பந்தை அவர் வீசியபோது, பந்தை லாவகமாக உள்வாங்கி இறங்கி அடிக்க  திட்டமிட்டார் ரோஹித். அவர் அடிப்பதற்காக பேட்டைச் சுழற்ற, பேட் கைகளைவிட்டு நழுவி பந்துக்கும் மேல் பறந்து போய் ஓரிடத்தில் விழுந்தது.

இந்த நேரத்துக்காக காத்திருந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சற்றும் தாமதிக்காமல் ரோஹித், கிரீஸ்க்கு வருவதற்குள்ளேயே ஸ்டம்பிங் செய்ததால் ரோஹித் ஆட்டமிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

INDVAUS, ROHITSHARMA