வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்! அமைச்சர்கிட்ட மக்கள் அப்படி என்ன கேள்வி கேட்டாங்க; பிரச்சாரத்தின் போது நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்
நாடு முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி, தேர்தல் நடப்பெறயிருக்கிறது. இதற்காக பல்வேறு கூட்டணிகள் உருவாகி, தொகுதி பங்கீடு நடைபெற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து. கடந்த 2014 மக்களவை தேர்தலில், தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமே. இதனையடுத்து இவர் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட முயற்சித்தனர். அதாவது, ஓகி புயல் பாதிப்பின் போது வரவில்லை. இப்போது எதற்காக வருகிறீர்கள் என்று பாஜகவினரைப் பார்த்து மீனவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது. உடனே அங்கு விரைந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மக்களின் கோபத்தைப் பார்த்து பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர்.