குழந்தை திருமணத்தை தைரியமாக தடுத்து நிறுத்திய குழந்தை! முழு விவரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

 

குழந்தை திருமணத்தை தைரியமாக தடுத்து நிறுத்திய குழந்தை! முழு விவரம்!

இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அவ்வப்போது சில பகுதிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில்15 வயது சிறுமி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை குழந்தைகள் உதவி எண்ணிற்கு போன் செய்து தானே தடுத்து நிறுத்தயுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 15 வயதே ஆன அந்த சிறுமிக்கும் 21 வயது பையனுக்கும் திருமணம் நடத்த பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், அந்த சிறுமி 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார்.இந்நிலையில், 10ம் வகுப்பு கடைசி தேர்வு அன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த சிறுமியை தேர்வுக்கு செல்ல பெற்றோர் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண்ணான "109" என்ற எண்ணிற்கு போன் செய்து தனக்கு நடக்கவுள்ள குழந்தை திருமணம் குறித்து திருமணம் நடைபெற சரியாக 2 மணி நேரம் முன்பு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள். சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். மேலும் இந்த திருமணம் குறித்தும், பெண்ணின் வயது குறித்தும் ஆவணங்களை அவரது பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களிடம் ஆவணங்கள் இல்லாததால் பெண்ணின் பெற்றோரை போலீசார் அந்த மாவட்ட வருவாய் அதிகாரி முன்னாள் ஆஜர் செய்தனர். அவர் பெற்றோரிடம் மீண்டும் இது போன்ற முயற்சியில் ஈடுபடகூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தார். இறுதியாக திருமணமும் நின்றது.

CHILD MARRIAGE, HYDERABAD