'அதிர்ச்சியில் உறைய வைக்கும்'...'கோவை சிறுமி'யின் பிரேத பரிசோதனை அறிக்கை'...கொந்தளித்த மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த மாணவி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.ஆனால் வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் சிறுமி கிடைக்காததால் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தீவிரமாக தேடினார்கள்.இரவு முழுவதும் தேடி கிடைக்காத நிலையில்,நேற்று காலையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.சம்பவம் குறித்து அறிந்தகாவல்துறையினர்,சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே இன்று காலை வெளியான, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் '5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக' அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொலை பிரிவுடன், போஸ்கோ பிரிவையும் முதல் தகவல் அறிக்கையில் தடாகம் காவல் துறையினர் சேர்த்துள்ளார்கள்.
குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் விஜயகுமார் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்யக் கோரி, தூடியலூர் பேருந்து நிலையம் முன்பு உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்போராடுதல் ஈடுபட்டனர்.