'தடுத்து நிறுத்தியதால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி'.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆட்டோ ரிக்ஷாவைத் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், போலீஸாரை தாக்கும் வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம், முசாஃபர்பூர் நகரில் உள்ள அஹோரியா பஜாரில், போலீஸ் அதிகாரி ஒருவர் டிராஃபிக்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வந்த நபர் ஒருவர், சாலையின் தவறான பாதையில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த ஆட்டோ ரிக்ஷாகாரரை, போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
வாக்குவாதம் முற்றியதால், ஆட்டோவை ஓட்டி வந்த ஆட்டோக்காரர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து போலீஸ் அதிகாரியை, ஈவு இரக்கமின்றி கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் பொதுக்களின் கூட்டம் கூடியதுடன், அனைவரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தனர்.
ஆனால் சுற்றியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களில் ஒருவர் கூட, போலீஸ் அதிகாரியை காப்பாற்ற முன்வரவில்லை. வேடிக்கைப் பார்த்ததுடன், போலீஸ் அதிகாரி மீது நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை அங்குள்ள மக்கள் மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
அதன்பின்னர், தாக்கப்பட்ட போலீஸ் அதிகாரி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காவல் பணி நேரத்தில், தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காசி மொஹமேத்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திவிட்டு, தலைமறைவாகியுள்ள இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH Bihar: An autorickshaw driver & his friends thrash a police personnel who stopped them from driving on the wrong side at Aghoria Bazar chowk in Muzaffarpur. The police personnel is admitted in hospital. Police is on the lookout for accused. (Note: Strong language) (26.03) pic.twitter.com/yIBz4D77AI
— ANI (@ANI) March 27, 2019