திரையில் கம்பிரமாக வர இருக்கிறார்...'மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன்'...மேஜராக நடிக்கும் இளம் நடிகர்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

மும்பை பயங்கரவாதத் தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.இந்தியாவையே அதிரவைத்த தாக்குதல் அது.அந்த தாக்குதலில் தீவிரவாதிகளை கொன்று,பலரது உயிரை காப்பாற்றி வீர மரணம் அடைந்தவர் மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன்.தற்போது அவரது வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

திரையில் கம்பிரமாக வர இருக்கிறார்...'மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன்'...மேஜராக நடிக்கும் இளம் நடிகர்!

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகள் கண்முடித்தனமான தாக்குதலை நடத்தினார்கள்.அங்கு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது பலரது உயிரை காப்பாற்றி வீர மரணம் அடைந்த தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ, மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணனின் வாழ்கை தற்போது தெலுங்கு, இந்தி மொழிகளில் படமாகிறது.

திரையில் மேஜர் சந்தீப்பாக இளம் நடிகர் அத்வி சேஷ் நடிக்கிறார். சசிகிரண் டிக்கா இயக்குகிறார். இவர் ’கூடாசரி’ என்ற படத்தை இயக்கியவர். இப்படத்துக்கு 'மேஜர்' எனப் பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தை தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின், ’மகேஷ்பாபு என்டர்டெயின்மென்ட்’ தயாரிக்கிறது. சோனி பிக்சர்ஸ் இணை தயாரிப்பு செய் கிறது. படப்பிடிப்பை 2019 தொடங்கி 2020-ல் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசிய நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும்,மகேஷ்பாபு என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான நர்மதா 'இது இந்திய படம் மட்டுமல்ல, சர்வதேச படமாக இருக்கும்.நிஜ ஹீரோவின் வாழ்க்கையினை திரையில் காட்டுவதில் நாங்கள் பெருமையடைகிறோம் என தெரிவித்தார்.

MUMBAI, MUMBAI TERROR ATTACK, SADEEP UNNIKRISHNAN, NSG