விநோதமாக விளையாடி.. ‘பவுலர்களைக் கடுப்பேற்றிய பிரபல வீரர்’.. வைரலாகும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

விநோதமாக விளையாடி.. ‘பவுலர்களைக் கடுப்பேற்றிய பிரபல வீரர்’.. வைரலாகும் வீடியோ..

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ள ஸ்டீவ் ஸ்மித்  2 இன்னிங்ஸிலும் சதமடித்துள்ளார். முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் இருவருக்கும் ஓராண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. ஓராண்டு தடைக்குப் பின்னர் களமிறங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்மித் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்மித் இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை விநோதமான முறையில் எதிர்கொண்டுள்ளார். பந்துகளை அடிக்காமல் ஸ்மித் பவுலர்களை கடுப்பேற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதை வைத்து ரசிகர்கள் பலர் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ASHES, ENGLAND, AUSTRALIA, STEVESMITH, VIRAL, VIDEO