‘டீ கடைக்காரரை ஓட ஓட விரட்டி வெட்டிய பயங்கரம்’.. ‘விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் காரணம்..’
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் டீ கடை உரிமையாளரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் டீ கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய கடைக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாரிமுத்துவிடம் இலவசமாக டீ கேட்டுள்ளனர். ஏற்கெனவே இதே கும்பல் பலமுறை மாரிமுத்துவை இப்படி தொந்தரவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த மாரிமுத்து அவர்களுக்கு இலவச டீ கொடுக்க மறுத்துள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த கும்பல் கடையில் வைத்தே கத்தி, பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் மாரிமுத்துவை தாக்கத் தொடங்கியுள்ளது. உயிருக்கு பயந்து அவர் ஓட பின்னாலேயே துரத்தி வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்புடைய ஒருவர் மட்டும் பிடிபட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள மற்ற 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இலவசமாக டீ கேட்ட விவகாரத்தில் டீ கடை உரிமையாளரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.