'தோனி இருந்தா இந்தியா ஜெய்ச்சிடுமா'?...அவர் மேல என்ன 'காண்டு'...வீரரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்உலககோப்பைக்கு தயாராகி கொண்டிருக்கும் இந்திய அணியில் தோனியைச் சேர்த்தாலும் கூட அணி வலுப்பெறாது என முன்னாள் இந்திய வீரர் கம்பீர் கடுமையாக தெரிவித்துள்ளார்.அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலககோப்பை போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில்,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-2 என்று இந்திய அணி இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் உலககோப்பைக்கு இந்திய அணி எந்த விதத்தில் தயாராகி வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
எந்த வீரர் மீதும் நம்பிக்கையில்லாத சூழலை உருவாக்கி விட்டார்கள் என கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, சஞ்சய் பாங்கர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்நிலையில் இது குறித்த கம்பீரின் கருத்தும் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ''இந்த அணி நிச்சயம் உலகக்கோப்பைக்கான அணி கிடையாது.ஆனால் உலகக்கோப்பைக்கான அணி விவரம் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு அணியில் பெரிய அளவிற்கு மாற்றங்கள் இருக்கப்போவதில்லை.அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த அணி தான் உலககோப்பையினை எதிர்கொள்ள போகிறது என்றால்,நிச்சயம் இது சிறந்த அணியாக இருக்க போவதில்லை.
மேலும் தோனியை இந்த அணியில் சேர்த்தாலும் பிளேயிங் லெவனில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.இதன்முலம் விராட் கோலி மீதான தன்னுடைய விமர்சனத்தை முதன் முதலில் கூறியதோடு,தோனியையும் விமர்சித்துள்ளார்.கம்பீர் கூறிய கருத்துகள் சமூகவலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.மேலும் தோனியின் ரசிகர்கள் கம்பீரை கடுமையாக சாடி வருகிறார்கள்.