33 ரன்களில் வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கும் 'தல' தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமகேந்திர சிங் தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் 33 ரன்கள் எடுத்தால் வரலாற்று சாதனை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி தனது சிறப்பான ஆட்டத்தின் முலம் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதில் தோனியின் பேட்டிங் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என பலரும் கூறிவந்தனர்.
தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடினார்.அதில் தொடர்ந்து மூன்று அரைசதங்களை விளாசி ஆட்டநாயகன் பட்டத்தை பெற்றார்.
தோனி அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் விளையாடி 16,967 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 33 ரன்கள் எடுத்தால் 17,000 ரன்களை கடந்த 6 -வது இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெறுவார். முன்னதாக சச்சின், டிராவிட் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.இன்று மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தோனி 33 ரன்கள் எடுத்தால் வரலாற்று சாதனை நிகழ்த்துவார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.