650 பேருக்கு இலவச ‘அபிநந்தன் கட்டிங்’.. அசத்தும் சலூன்காரர்.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > கதைகள்புல்வாமா தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட இந்திய துணை நிலை ராணுவ வீரர்கள் சுமார் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
பின்னர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முகாமிட்டிருந்த பகுதியில் இந்திய ராணுவம் இறங்கி அதிரடி தாக்குதல் நிகழ்த்தி சுமார் 300 பயங்கரவாதிகளை அழித்ததாக இந்தியா தெரிவித்தது. இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதல் இந்தியர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நேரத்தில்தான் இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு சர்வதேச நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.
இதனை அடுத்து இளைஞர்கள் அபிநந்தன் மீண்டு வந்ததைக் கொண்டாடியதோடு, அவரது கொடுவா மீசை ஸ்டைலை விரும்பத் தொடங்கியுள்ளனர். அபிநந்தனின் துணிச்சலுக்கும் மீசைக்குமான தொடர்பு பலரையும் ஈர்த்துள்ளதால், அபிநந்தனின் மீசை தற்போது கார்ட்டூன் படங்களாக வரையப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது. இளைஞர்கள் பலரும் அபிநந்தன் மீதான மரியாதையால் அவரது ரசிகர்களாகிவிட்டதால் அவர் போன்று மீசை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பெங்களூருவைச் சேர்ந்த முகமது சந்த் அபிநந்தனைப் போல் மீசை வைத்து பிரபலமாகினார்.
இந்நிலையில் பெங்களூரின் நானேஷ் சலூன் கடைக்காரர் தொடர்ந்து தன் சலூனுக்கு அபிநந்தன் ஸ்டைல் கட்டிங் மற்றும் மீசை வைக்க வேண்டும் என கேட்டு விரும்பி வருபவர்களுக்கு அந்த கட்டிங்கை இலவசமாக செய்கிறார். தனக்கு ராணுவத்தினரின் மீது எல்லைகடந்த மரியாதை உள்ளதாகவும் இவ்வாறு செய்வதால் இளைஞர்கள் ராணுவத்துக்கு போகக் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்வதாகவும் அந்த சலூன் கடையின் உரிமையாளரான நானேஷ் தக்கர் தெரிவித்துள்ளார்.
Wing Commander #AbhinandanVarthaman's moustache style getting popular. A Bengaluru local Mohammed Chand says,' I'm his fan, we follow him. I like his style. He is the real hero; I'm happy.' pic.twitter.com/cT7QGXntMs
— ANI (@ANI) March 3, 2019