‘இதல்லாம் பாக்கும்போதே உன்ன பத்தி தெரியுது..’ இளம்பெண்ணிடம் காவலர் செய்த காரியம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேசத்தில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை அவதூறாகப் பேசிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியிலுள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது அவரிடம் சிலர் வரம்பு மீறி நடந்துகொள்ள முயற்சித்துள்ளனர். அதைத் தட்டிக் கேட்ட அவருடைய சகோதரரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதுபற்றி புகார் அளிப்பதற்காக அந்தப் பெண் நசிராபாத் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த காவலர் புகாரைப் பதிவு செய்யாமல், அந்தப் பெண் ஏன் இவ்வளவு மோதிரம், வளையல்கள், செயின்கள் எல்லாம் அணிந்திருக்கிறார்? எனக் கேட்டுள்ளார். மேலும் அதையெல்லாம் பார்க்கும்போதே அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிகிறது என அவரிடம் அவதூறாகப் பேசியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அவதூறாகப் பேசிய அந்தக் காவலர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரியங்கா காந்தி, “பெண்களுக்கு நீதி கிடைக்க முதல்படி அவர்கள் சொல்வதைக் கேட்பதுதான்” என இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
छेड़खानी की रिपोर्ट लिखवाने गई लड़की के साथ थाने में इस तरह का व्यवहार हो रहा है।
एक तरफ उत्तर प्रदेश में महिलाओं के खिलाफ अपराध कम नहीं हो रहे, दूसरी तरफ कानून के रखवालों का ये बर्ताव।
महिलाओं को न्याय दिलाने की पहली सीढ़ी है उनकी बात सुनना।
Video credits @benarasiyaa pic.twitter.com/J0FdqBR2Tt
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 25, 2019