'இதெல்லாம் ட்ரை பண்ணாதீங்கனு'.. 'சொன்னா கேக்க மாட்டீங்களா?'.. வினையாக மாறிய வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பணியிடத்திலோ அல்லது மதிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய இடத்திலோ டிக் டாக் வீடியோக்களை முயற்சி செய்து பலரும் வேலையை இழந்து வருவதும், தண்டனைகளை அனுபவிப்பதும் சமீப காலமாக நிகழ்ந்தபடி உள்ளது.

'இதெல்லாம் ட்ரை பண்ணாதீங்கனு'.. 'சொன்னா கேக்க மாட்டீங்களா?'.. வினையாக மாறிய வீடியோ!

அண்மையில் குஜராத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் டியூட்டி நேரத்தில் காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோவை முயற்சி செய்ததை அடுத்து கண்டனத்துக்கும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் உள்ளானார். தெலுங்கானாவில் உள்துறை அமைச்சர் முகமது அலியின் பேரன், போலீஸ் வாகனத்தின் மீது அமர்ந்து டிக்டாக் வீடியோவை முயற்சி செய்ததால், ஐஜியால் எச்சரிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டிலும், போலீஸ் ஸ்டேஷன் முன் நின்று டிக்டாக் வீடியோக்களை முயற்சித்து பலரும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர். முன்னதாக மத்தியில் பணியிடத்தில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் டிக் டாக் வீடியோவை கூட்டாக சேர்ந்து முயற்சித்த நர்சுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத்தனை சம்பவங்கள் நிகழ்ந்தும், ஹைதராபாத்தின் காந்தி மருத்துவமனையில் டிக்டாக் வீடியோவை முயற்சித்த, பிசியோதெரபி இண்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொண்டு வந்திருந்த இளம் மாணவியும் மாணவரும் என 2 பேர், மருத்துவமனை வளாகத்தில் நின்றபடி ஏகப்பட்ட படவசனங்களுக்கும் பாடல்களுக்கும் நடித்து டிக்டாக் வீடியோக்களை எடுத்துள்ளனர். இதையறிந்த மெடிக்கல் இன் சார்ஜ் இவர்களை, இண்டர்ன்ஷிப் பயிற்சியில் இருந்தே நீக்கியுள்ளார்.

HYDERABAD, TIKTOK, VIDEO