‘ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்படும் கோயில் யானை’.. நெஞ்சை பிழியும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

யானைகளை சில நாடுகள் தெய்வமாகவே வணங்குகின்றன. இந்தியாவில் கூட விநாயகரை யானை வடிவில் வழிபடுவதுண்டு.  எல்லாவற்றுக்கும் மேலாக மென்மையாக அசைந்து வரும் யானையை பால்யத்தில் எல்லோருக்குமே பிடித்திருக்கக் கூடும்.

‘ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்படும் கோயில் யானை’.. நெஞ்சை பிழியும் வீடியோ!

அப்படிப்பட்ட யானைகள் சமீபத்தில் நீர்நிலைகள் மற்றும் புகலிடங்கள் இன்றி தவிப்பதையும் பெற்றோரை விட்டு பிரிந்து நகர்ப்புறத்தில் வலம் வரும் அவலத்தையும் குழிகளுக்குள் விழுந்து மேலெழும்பி வர முடியாமல் மாட்டிக்கொள்ளும் குட்டி யானைகளின் தவிப்பையும் பார்த்த வண்ணம் வருகிறோம்.

சின்னத்தம்பி யானை மீது கோவை  மக்கள் வைத்த பிரியம்தான் பிரிங் பேக் சின்னத்தம்பி என்கிற பெயரில் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அப்படியிருக்க சமீபத்தில் கேரளாவில் யானை ஒன்று அதன் பராமரிப்பாளரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருவதோடு பார்ப்பவரை நெஞ்சை பிழிய வைக்கிறது.

யானைகளை அன்பாக பார்த்துக்கொள்வதில், தங்கள் வழக்கமான சடங்குகள் மற்றும் கலாச்சார வாழ்வியலின் ஒரு பகுதியாக கேரள மக்கள் கருதும் நிலையில், கர்ணன் என்கிற இந்த கோயில் யானைக்கு கேரளாவின் திரிசூருக்குட்பட்ட புட்டுக்காடு பகுதியில் இப்படியான கோர சம்பவம் நிகழ்ந்துள்ளதால் கேரள மக்கள் உட்பட பலரும் இதற்கு தங்கள் கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

KERALA, ELEPHANT, VIRALVIDEO, SAD, TEMPLE ELEPHANT