’நல்லது.. அந்த நாட்டுக்கு ஆதரவா இல்ல’.. உலகப்புகழ் தமிழரை அழைத்துப் பாராட்டிய ட்ரம்ப்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப், கூகுள் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சையை அழைத்து பாராட்டி பேசியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

’நல்லது.. அந்த நாட்டுக்கு ஆதரவா இல்ல’.. உலகப்புகழ் தமிழரை அழைத்துப் பாராட்டிய ட்ரம்ப்!

வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, கூகுள் நிறுவன அதிகாரியான சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசினார். அப்போது பல மணிநேரம் இருவருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சையுடனான சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாகத்தான் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடு உள்ளதாகவும், சீன ராணுவத்துக்கு ஆதரவாக இல்லை என்றும் , இதில் சுந்தர் பிச்சை மிகவும் உறுதியுடன் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை சந்திப்புக்குபின் பேசிய சுந்தர் பிச்சை, 'அதிபருடன் நடந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமானது. அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அமெரிக்க அரசாங்கத்துடன், கூகுள் நிறுவனத்தின் ஒத்துழைப்பு உள்ளிட்டவைகள் பற்றி விரிசாக பேசப்பட்டன' என்று தெரிவித்தார்.

முன்னதாக, கூகுள் நிறுவனம் சீனாவுக்கும், அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக இயங்கி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இதேபோல், அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரும், கூகுள் நிறுவனம் அதன் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வணிக சேவைகள் மூலம் சீனாவின் ராணுவத்துக்கு மறைமுகமாக உதவுதாக புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்திலும் சுந்தர் பிச்சை மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் கூகுள் நிறுவனத்தை பாராட்டி பேசியிருப்பது உலக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

TRUMP, SUNDARPICHAI, GOOGLE