‘இத பத்தி நீங்க சொன்னா அது வேற லெவல்’.. ரஹ்மான், சச்சினிடம் மோடி ரிக்வஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி, தனது வலைப்பக்கத்தில் ஜனநாயகத்துக்கு 4 கோரிக்கைகள் என்கிற பெயரில் முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

‘இத பத்தி நீங்க சொன்னா அது வேற லெவல்’.. ரஹ்மான், சச்சினிடம் மோடி ரிக்வஸ்ட்!

முன்னதாக வாக்குப்பதிவு நாளை குறித்து வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்திய அவர், வாக்குரிமை என்பது ஜனநாயகத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், வாக்குப்பதிவுக்கு முன் வாக்காளர் அடையாள அட்டை எடுக்கவில்லை என்றால் எடுத்துவிட கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து வாக்காளராகிய நம் பெயர் தேர்தல் ஆணையத்தின் கணக்கில் இருக்கிறதா என்பதை நாமே பரிசோதித்துக்கொள்ளவும், மற்றவர்களை வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று வாக்குப்பதிவு செய்யச்சொல்லி அறிவுறுத்தவும் வலியுறுத்தினார். இதன் ஒரு அங்கமாக வேலைக்கு லீவு போட்டாவது வாக்களிக்கச் சொல்லி கோரினார்.

மேலும் இந்தியாவின் முக்கிய பிரபலங்களான புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் நாட்டு குடிமக்களிடம் வரவிருக்கும் 2019-ஆம் ஆண்டின் தேர்தலில் ஓட்டுப்போடு போடச் சொல்லி குறிப்பிட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களின் குரலை வலுவாக்கும் ஒரே பெரிய வழி வாக்களிப்பதுதான் என்றும் பிரதமர் மோடி தனது ட்வீட்டில் இறுதியாகத் தெரிவித்துள்ளார். இதனை ரி-ட்வீட் செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானும் கண்டிப்பாக, நாங்கள் செய்கிறோம் ஜி என்று பதிலளித்துள்ளார்.

NARENDRAMODI, ARRAHMAN, SACHINTENDULKAR, LOKSABHAELECTIONS2019