‘பாத்து வரக்கூடாதா பாஸ்’.. கடைசி ஒருநாள் போட்டியில் நடந்த நெகிழ்ச்சிகரமான வைரல் காட்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேதர் ஜாதவ் ரன் எடுக்க ஓடும் போது ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் மீது மோதி கீழே விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘பாத்து வரக்கூடாதா பாஸ்’.. கடைசி ஒருநாள் போட்டியில் நடந்த நெகிழ்ச்சிகரமான வைரல் காட்சி!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணயம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிது. இதில் முதலில் நடந்து முடிந்த டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து நடந்த ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இரு வெற்றிகளுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கடைசி ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக காணப்பட்டது.

இதனை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று(13.03.2019) டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் குவித்தது.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 3-2 என்கிற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

அப்போது போட்டியின் 40 -வது ஓவரை ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் வீசினார். அதை புவனேஸ்வர்குமார் தூக்கி அடிக்க, மறுமுனையில் இருந்த கேதர் ஜாதவ் ரன் எடுக்க ஓடினார். உடனே மேக்ஸ்வெல் டைவ் அடித்து பந்தைப் பிடிக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக இருவரும் மோதி கீழே விழுந்தனர். அப்போது கேதர் ஜாதவ் எழுவதற்கு மேக்ஸ்வெல் கை கொடுத்து உதவினார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

INDVAUS, MAXWELL, KEDARJADHAV, ODI