‘ரயில்நிலையங்களில்’... ‘இலவச வைஃபை’... ‘கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு’...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் இலவச வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2015 முதல் இந்தியாவில் ரயில்நிலையங்களில், ரயில்வே துறையுடன் சேர்ந்து கூகுள் நிறுவனம் இலவச வைஃபை சேவைகளை வழங்கி வந்தது. வைஃபை நிறுவது, அதனை பராமரிப்பது உள்ளிட்டவைகளை கூகுள் நிறுவனம் கண்காணித்து வந்தது. சுமார் 400 ரயில்நிலையங்களில் படிப்படியாக கூகுள் நிறுவனம் வைஃடிப சேவைகளை நிறுவியது. இந்நிலையில், இந்தியாவில் வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து blog-ல் எழுதியுள்ள கூகுளின் துணைத் தலைவர் சீசர் குப்தா, உலகிலேயே அதிகம் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், விலை குறைந்த இணைய சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மொபைல் போன் மூலம் எளிதில் இணையத்தைப் பயன்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைஃபை சேவைகளை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்நிலையங்களில் மட்டுமில்லாது, ரயில்நிலையங்கள் அருகில் இருப்பவர்களும் இலவச வைஃபை வசதியை பயன்படுத்தும் திட்டத்தை யோசனை செய்து தருவதாக தெரிவித்த நிலையில், கூகுள் நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்து அதிர்ச்சியளித்துள்ளது. டாட்டா ட்ரஸ்ட் குரூப், பவர் கிரிட் கார்ப் நிறுவனங்கள் இலவச வைஃபை சேவையை தொடரும் என்று கூறப்படுகிறது.