'ஏன்மா பீதிய கிளப்புறீங்க'...'ஹோட்டலில் தங்கிய சீன பெண்'... 'அதிர்ந்த மேலாளர்'... சென்னைக்கு வரும் ஜியாஞ்சுன் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமேஸ்வரத்தில் சீன பெண் தங்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பரிசோதனைக்காகச் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் சீனாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சீனாவில் 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் பல்வேறு நாடுகளும் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்திய அரசும் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் விசா வழங்கும் முறையை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த ஜியாஞ்சுன் என்ற சீன பெண், கடந்த ஜனவரி 21ம் தேதி கொல்கத்தாவிற்கு வந்தார். பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுலா சென்ற அவர், ஆன்மிக பயணமாக நேற்று இரவு ராமேஸ்வரம் வந்தார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து அவர் தங்கிய நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விடுதி மேலாளர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், ஜியாஞ்சுனிற்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார்கள். இதையடுத்து ராமேஸ்வரத்திலிருந்து தனி வாகனம் மூலம் மதுரை விமானம் நிலையம் அழைத்து வரப்பட்ட அவர், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் அவருக்கு அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே சீன பெண் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்தது அந்த பகுதியில் பீதியைக் கிளப்பியுள்ளது.