'எக்ஸ்பிரஸ் சாலையில் தொடரும் சோகம்'...கோரமான விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பயணிகள் பேருந்து மோதிய கோர விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதில் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'எக்ஸ்பிரஸ் சாலையில் தொடரும் சோகம்'...கோரமான விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து!

தனியார் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று,உத்தரபிரதேச மாநிலம் ஆரையாவில் இருந்து நொய்டா நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், கரோலி கிராமத்துக்கு அருகே இன்று அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது அதிபயங்கரமான மோதியது.மோதிய வேகத்தில் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது.மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் பேருந்து டிரைவர், ஒரு குழந்தை, பெண் உட்பட 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதனிடையே யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

அதிகாலையில் வாகனங்கள் வேகமாக வரும்போது அதிகப்படியான விபத்துகள் நடப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.கடந்த ஆறு வருடங்களில் 705 பேர் இங்கு நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ACCIDENT, YAMUNA EXPRESSWAY, UTTAR PRADESH, GREATER NOIDA