'உலகமே கொரோனா பீதியில்...' 'ஆனா...' 'எங்க தலைக்கு தில்ல பாத்திங்களா?...' 'வட கொரியா வைலண்ட்...' 'அமெரிக்கா சைலண்ட்...'
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்திருக்கும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஆனால் வடகொரியா எந்தவித பதற்றமும் இல்லாமல் தொடர்ந்து, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
196 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், வடகொரியா மட்டும் தங்கள் நாட்டில் இதுவரை ஒரு வைரஸ் தொற்று கூட கிடையாது எனக் கூறி வருகிறது. அண்டை நாடான தென்கொரியாவில் 150க்கும்மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. வடகொரியா அரசும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.இது சர்வதேச அளவில் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
அதே சமயம் உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் எந்தவிதமான பதற்றமும் இன்றி ஏவுகணைகளை சோதித்து வருகிறது. வடகொரியா நேற்று 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் வோன்சான் கடற்கரையில் இருந்து, குறுகிய தொலைவு சென்று தாக்கும் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் 230 கி.மீ தொலைவுக்கு 30 கி.மீ உயரத்தில் சென்று இலக்கைத் தாக்கியது.
உலக நாடுகள், கொரோனா வைரசால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த மாதத்தில் தொடக்கத்தில் இருந்து வடகொரியா பரிசோதனை செய்யும் 9-வது ஏவுகணை இதுவாகும். இவை அனைத்தையும் கிம் ஜான் அன்னின் மேற்பார்வையிலேயே நடந்துள்ளது